கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தை கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது கிருஷ்ணகிரி அடுத்த ராயக்கோட்டை மேம்பாலம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டிரமேஷ் தலைமையில் நடைபெற்றது கிழக்கு ஒன்றிய செயலாளர் மாதையன் வரவேற்புரை ஆற்றினார் தொகுதி செயலாளர் தியாகு முன்னிலை வைத்தார் சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் இந்த கூட்டத்தில் அரசு பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கனகமுட்லு கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் அந்த கிராமத்தில் கழிப்பிடம் கட்டித் தர வேண்டும் எனவும் அரசு பள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளி மலை முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் சோக்காடிகிராமத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் அவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் எனவும் கட்டிக்கான பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தேவசமுத்திரம் ஏரி நிரம்பி உபரி நீர் அதிக அளவு வெளியேறும் பொழுது சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் மக்கள் வழி பாதையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவே கால்வாய் வெட்டி வீணாக வெளியேறும் உபரிநீரை பொதுமக்கள் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களில் புதிதாக முகாம்களை கட்டமைப்பது மற்றும் வாக்குச்சாவடி வாக்கு சாவடிகளுக்கான பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பு மைய துணைச் செயலாளர் திராவிட ராசா தொகுதி துணை செயலாளர் ஐக்கிய பேரவை மாவட்ட செயலாளர் செந்தில் நிர்வாகிகள் சேர்த்து அருள் மாதையன் பவுல் சிலம்பரசன் வெங்கடேஷ் கோவிந்தராஜ் சுஜி குமார் அருண் பிரசாத் ராஜேஷ் குமார் சசி அன்பு மாயாண்டி ரூபேஷ் மிலிட்டரி கோபி சந்திரபோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் மூங்கில் பட்டி கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Moorthi Reporter