கெலமங்கலம் நரகத்தில் விநாயகர் சிலை ஊர்வலமாக
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் நரகத்தில் விநாயகர் சிலை ஊர்வலமாக சென்று தென்பெண்ணை ஆற்றில் விநாயகர் சிலையை கலைக்கப்பட்டது.
கெலமங்கலம் நகரத்தில் கிராம தேவதை ஸ்ரீ, பட்டாளம்மன் திருகோயில் அருகில் 15 ஆம் ஆண்டு அருள் புரியும் விநாயகர் சிலை வைத்து தினமும் பூஜைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க விநாயகரை கிரைன் வாகனம் மூலமாக டிராக்டரில் ஏற்றி வைக்கப்பட்டு கேரளா சண்டி மேளம் ஆடல் பாடல் உடன் பல்வேறு சிறுத்தை புலி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து
நகரத்தின் முக்கிய வீதி வழியாகவும் பேருந்து நிலையம் சுல்தான் பேட்டை செஞ்சி ரோடு வழியாக ஊர்வலம் அன்னதானம் நடைபெற்றது.
அதேபோன்று பாரதி ஜனதா கட்சியின் சார்பில் சௌடேஸ்வரி அம்மன் திருகோயில் அருகில் வீர ஆஞ்சநேயர் சிலைபிரம்மாண்ட முறையில் அமைத்திருந்தார்கள்.
இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இந்த விநாயகர் சிலையானது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அண்ணா நகரில் இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்ட விநாயகர் அமைக்கப்பட்டு அதுவும் பொதுக்கூட்டம் நடந்த பிறகு பிரமாண்டமாக ஊர்வலம் அன்னதானம் மற்றும் ஊர்வலமாக
கணேஷா காலனியில் அமைந்துள்ள விநாயகர் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர் இந்த விநாயகர் கிரேன் மூலமாக டிராக்டரில் ஏற்றி வைக்கப்பட்டு ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக ஊர்வலம் வந்தபோது பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது வான வேடிக்கைகள் உட்பட ஆடல் பாடலுடன் பக்தர்கள் சென்றார்கள்
அதேபோல் வாணியர் தெருவில் சிவன் பார்வதியோடு விநாயகர் வைத்து அவர்களும் மேல தாளங்களோடு ஊர்வலமாக எடுத்து சென்றார்கள்
காலையிலே ஞாயிற்றுக்கிழமை சந்தை நாள் என்பதால் கூட்ட நெரிச்சல் கொஞ்சம் அதிகமாக காணப்பட்டது முக்கிய வீதி வழியாக வந்த விநாயகர் சிலைக்கு அப்பகுதி மக்கள் பூக்கள் பழங்கள் என கொடுத்து பூஜைகள் செய்து வழிபட்டனர் பின்னர் சின்னட்டி அருகில் ஏரியில் தண்ணீரில் கரைக்கப்பட்டது. டிஎஸ்பி முரளி தலைமையில் கெலமங்கலம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தார்கள்...