தேசியதலைவர்களை அவமதிக்கும் பேரூராட்சி நிர்வாகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சியில் காவல் நிலையம் எதிரில் பேரூராட்சிக்கு சொந்தமான குடி தண்ணீர் கிணறு மற்றும் பம்ப்செட் மோட்டார்அறை அமைந்துள்ளது
இந்த இடத்தில் மோட்டார் பம்ப் அறையின் சுவற்றில் தேசிய தலைவர்கள் ஆன தந்தை பெரியார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி ஆகியோரின் உருவப்படங்களை கெலமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரையப்பட்டுள்ளது. இந்த உருவப்படங்கள் இருக்கின்ற இடத்தில் சாக்கடை கழிவு குப்பைகளை சமூக விரோதிகள் கொட்டியுள்ளனர் .மேலும் உருவப்படங்கள் சிதலமடைந்தும், வண்ணங்கள் பெயர்ந்தும், அரைகுறை உருவமாக காட்சியளிக்கிறது, இது தொடர்பாக பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை மேலும் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இன்று சுவற்றில் வரையப்பட்டுள்ள சிதலமடைந்துள்ள தேச தலைவர்களின் உருவபடங்களை பார்த்து பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் வருந்தமடைந்து கண்ணீர்விட்டனர் மேலும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் சமுக ஆர்வலர்களான வஜ்ரகுமார், சின்னதம்பி, நாகராஜ்,சபியுல்லா மற்றும் பொதுமக்கள் அப்படங்களுக்கு பூமாலை அணிவித்து மரியாதை செய்தனர்.