நொகனூர் ஊராட்சியில் ரூ. 32.80 இலட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை T.இராமச்சந்திரன் B.Sc.,LLB.,MLA பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நொகனூர் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 32.80 இலட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன் B.Sc.,LLB.,MLA அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
அர்த்தகூர் கிராமத்தில் ரூ.2 இலட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், ரூ. 2 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் ரூ. 2 இலட்சம் மதிப்பில் ஃப்ளவர் பிளாக் அமைத்தல்,
கொத்தூர் கிராமத்தில் ரூ.2.20 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, ரூ. 1.50 இலட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், ரூ. 5 இலட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைத்தல்.
நொகனூர் கிராமத்தில் ரூ. 9.10 இலட்சம் மதிப்பில் களம், ரூ. 2 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்தல்.
மரகட்டா கிராமத்தில் ரூ. 2.50 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்தல்.
உச்சனப்பள்ளி கிராமத்தில் ரூ. 2.50 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, எஸ்.சி காலணியில் ரூ. 2 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்தல்.
ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா, குமார், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
B. S. Prakash