முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ்.
ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.
மேலும், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த ,மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது.
இந்த சட்டம் மூலம் இனி பிறப்பு சான்றிதழை முக்கியமான ஆவணமாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஆன்லைன் வழியாக மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை டவுன் லோடு செய்ய முடியும். ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும்.
இதுவரை பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை. இப்போது பெறுவதன் மூலம் டிஜிட்டல் பதிவு மூலம் பொது சேவைகள் மற்றும் சமூக நல திட்டங்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும் பெற்றிட முடியும். இந்த சட்டம் அமலுக்கு வருவதால் இனி பல சேவைகளில் இதை அடையாள அட்டையாக, ஒரு முக்கிய ஆவணமாக வழங்க முடியும்.
ரேஷன் அட்டையை போல இதையும் இருப்பிற்கான அடையாளமாக பயன்படுத்த முடியும். ஆனாலும் பல இடங்களில் ஆதார் கேட்கப்படுவதால் இந்த அட்டை எந்த அளவிற்கு உதவும் என்று தெரியவில்லை. அதே சமயம் கல்லூரி சேருவது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த அட்டை உதவியாக இருக்கும்.
வயது தொடர்பான பல்வேறு சேவைகள், தேர்விற்கு விண்ணப்பம் செய்வது போன்ற சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும்.
இந்த புதிய விதி மூலம் பிறப்பு சான்றிதழை பின்வரும் இடங்களில் பயன்படுத்த முடியும்.
- கல்வி நிலையங்களில் சேர பயன்படுத்த முடியும்
- டிரைவிங் லைசென்ஸ் பெற பயன்படுத்த முடியும்
- வாக்காளர் பட்டியல் பெற பயன்படுத்த முடியும்
- ஆதார் எண் பதிவு பெற பிறப்பு சான்றிதழை ஒரு ஆவணமாக பயன்படுத்த முடியும்
- திருமணம் பதிவு செய்ய பிறப்பு சான்றிதழை ஒரு ஆவணமாக பயன்படுத்த முடியும்
- அரசு பணிகளில் சேரவும் பிறப்பு சான்றிதழை ஒரு ஆவணமாக பயன்படுத்த முடியும்
- ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும்.
- பாஸ்போர்ட் வழங்குதல் பணிகளுக்கு பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும்.
டிஜிட்டல் முறையில் இந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் துரிதமாக பணிகளை செய்ய முடியும். பல சேவைகளை எளிதாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.