ஓசூர் எலைட் ரோட்டரி சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு ஸ்னல்லன் சார்ட் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணகிரி மாவட்ட தளி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சிகள் நடைபெற்றது. இதில் 225 அரசுப்பள்ளிகளை ஆசிரிய ஆசியைகள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கண் பரிசோதனையை மேற்கொள்ள உதவும் வகையில் ஸ்னல்லன் சார்ட் மற்றும் ஓசூர் எலைட் ரோட்டரி சார்பில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான கண் சிகிச்சை பரிசோதனை அட்டைகள் ஆகியவை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் லட்சுமி நாராயணன், பால்ராஜ், டயட் அலுவலர் முனியப்பன், பி.ஆர்.சி கண்காணிப்பாளர் சுதாகர், ஓசூர் எலைட் ரோட்டரி முன்னாள் தலைவர் ராசு, செயலாளர்சங்கர், ரொட்டேரியன்ஸ் நீலமேகம், சண்முகநாதன், காளிமுத்து, பிரகாசம் மற்றும் கொத்தஜீகூர் தொடக்கப்பள்ளி ஆசிரியை காயத்ரி மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
B. S. Prakash