வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி எடுக்கும் புது அவதாரம்....?!

 வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி எடுக்கும் புது அவதாரம்....?!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் எதிர்க்கட்சி தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் அளித்த பேட்டியில்

வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக வரும். ஆனால் பா.ஜ.க.கூட்டணியில் இடம் பெற்ற சில கூட்டணி கட்சிகள் இப்போது அவர்களுக்கு ஆதரவு கொடுக்க மறுத்து இருப்பதால் பா.ஜ.க.வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும். அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கக்கூடிய கட்சிகள் அவர்களுடன் சேர தயாராக இல்லை. அந்த கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைக்கலாம். எனவே நாங்களும் முயற்சி செய்து பார்ப்போம். எதிர்க்கட்சி கூட்டணியில் சுமூகமாக தொகுதி பங்கீடு ஏற்படும் என்று நம்புகிறேன்.

தோல்வியை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாநிலத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்படும் போது பா.ஜ.க-வுக்கு எதிராக ஒரே வேட்பாளரை நிறுத்த முடியும்.

 மற்ற மாநிலத்தில் இரண்டு அல்லது மூன்று வேட்பாளர் இருக்கலாம். வாக்காளர்கள் தாங்கள் சிறந்த வேட்பாளராக கருதும் நபரை தேர்ந்தெடுப்பார்கள். அது ஒன்றுதான் வாக்காளர்களால் செய்யக்கூடிய ஒன்றாகும்.

 இதில் கருத்து வேறுபாடுகள் இருக்கும் பட்சத்தில் பா.ஜ.க.வேட்பாளர் வெற்றி பெறலாம். தமிழ்நாடு மற்றும் கேரளாவை எடுத்துக்கொள்ளுங்கள்.

கேரளாவில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு நினைத்து பார்க்க முடியாத ஒன்று ஆகும். 

ஆனால் அதன் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒரே அணியில் இடம் பெற்று இருக்கிறது. அவர்கள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார்கள். வரும் தேர்தலிலும் போட்டியிடுவார்கள். எனவே மக்களுக்கு நினைவூட்டுவது என்னவென்றால் உங்களது தொகுதியில் சிறந்தவர்களுக்கு வாக்களிப்பதுதான்.

 சசிதரூர்

மோடி மோடி என்று கோஷமிடுபவர்கள் மோடியை வாரணாசி மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். 

ஒவ்வொருவரும் தங்களது தொகுதியில் சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். 

மோடியை அனுப்புவதற்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் அது அவர்களது விருப்பம்'' என்று தெரிவித்தார்.

 காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சசி தரூரின் இந்த பேட்டியை  பார்க்கும்போது இந்திய கூட்டணி மோடியை பார்த்து மிகவும்  பயப்படுவதாகவே தெரிகிறது.   அதனால் தான் உங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல வேட்பாளருக்கு வாக்களியுங்கள்  அவருக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்கிற   விதத்தில் பேசி வருகிறார்.

 அவர் பேச்சின் சாரம்சமே அகில இந்திய அளவில் மோடி வேண்டும் என்பவர் மோடிக்கு வாக்களிக்கட்டும்.  மற்றபடி அவர்களின் தொகுதிக்கு நல்ல எம்.பி. வேண்டுமானால்  நல்ல வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.  

ஏனென்றால் எங்களால் இப்போதைக்கு ஒரு நல்ல பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த முடியவில்லை என்பதைத்தான் சுட்டிக் காட்டுகின்றது. 

 எனவே வாக்காளர்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்