மத்திய அரசின் சோலார் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

 மத்திய அரசின் சோலார் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசின் சோலார் பேனல் திட்டத்தில் விண்ணப்பித்து, பொதுமக்கள் மானியம் பெறலாம் என, தர்மபுரி மின்வாரியத் துறையினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டத்தில், அனைத்து வீட்டு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில், ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க, 30,000 ரூபாய், 2 கிலோ வாட்டுக்கு, 60,000, 3 கிலோ வாட்டுக்கு, 78,000 ரூபாய் மத்திய அரசால் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு, வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் வழங்கப்படும். திட்டப்பணிகள் முடித்த, 7 நாட்களிலிருந்து, 30 நாட்களுக்குள் இத்தொகை வழங்கப்படும். ஒரு கிலோ வாட் சோலார் பேனல், ஒரு நாளில், 4 முதல், 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, www.pmsuryaghar.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


Popular posts
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா ...!
படம்
அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம்..!?
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
அமைதிக்கு பெயர் தான் சாந்தி....! அதிகம் பேசாமல் இருப்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்...!!
மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்...
படம்