2022-23ஆம் கல்வியாண்டிற்கான RTE கல்வி கட்டண பாக்கி உடனடியாக வரவு வைக்கப்படும். தனியார் பள்ளிகளின் இயக்குனர் தகவல் ....!
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி 2022 - 23ம் கல்வியாண்டில் இத்திட்டத்தின்படி எல்.கே.ஜி. வகுப்பில்சேர்க்கப்பட்ட 65 ஆயிரத்து 946 குழந்தைகள் மற்றும் இந்த திட்டத்தின் மூலம் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்ற மற்ற 3,51,122 மாணவர்களை சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 17 ஆயிரத்து 68 மாணாக்கர்களின் விவரங்களை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்ட குழுவினால் சரி பார்க்கப்பட்டதை தொடர்ந்து அப்பள்ளிகளுக்கு ஈடு செய்யும் தொகை 383.59 கோடி ரூபாய்களை வழங்க அரசால் அரசாணை 01.03.2024 அன்று வழங்கப்பட்டுள்ளது. அத்தொகையினை விரைவாக அந்தந்த பள்ளிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கான பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றோம்.
மேலும் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 496 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் தகுதியுள்ள 70 ஆயிரத்து 553 மாணவர்கள் எல்கேஜி வகுப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்கள் மற்றும் இவர்களுடன் சேர்ந்து படிக்கின்ற மற்ற வகுப்பு ஆர். டி. இ. மாணவர்களுக்கான கல்வி கட்டணம் வழங்குவதற்கான ஆய்வும் முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2024-25ஆம் நிதி ஆண்டில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட பின்பு இதற்கான கல்வி கட்டணம் தனியார் பள்ளிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தனியார் பள்ளிகளின் இயக்குனர்11.03.2024 அன்று ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.