சிவப்பு நிற நம்பர் பிளேட்டுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?
• RAVICHANDRAN
சிவப்பு நிற நம்பர் பிளேட்டுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?
சாலையில் மஞ்சள்,வெள்ளை,சிவப்பு,பச்சை என பல வண்ணங்களில் வாகன நம்பர் பிளேட்களை தினமும் பார்க்கிறோம். இந்த வண்ண நம்பர் பிளேட்டுகள் குறிப்பது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
இந்தியாவில் இந்த நம்பர் பிளேட்டுகளுக்கென சில அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த கட்டுப்பாட்டுகளுடன் ஓட்டுவதற்கு தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
வெள்ளை நிற எண் பலகை: தனியார் வாகனம் / சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய வாகனம். இதனை வணிக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாது.
3/7
மஞ்சள் நிற எண் பலகை: வாடகை மற்றும் வியாபார ரீதியிலான வணிக போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடிய டாக்ஸி, ட்ரக்குகள் போன்ற வாகனம். வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது இதற்கென தனி டிரைவிங் பெர்மிட் அவசியமாகும்.
கருப்பு நிற எண் பலகை: வாடகைக்கு எடுப்பவரே சொந்தமாக ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட வாகனம். இதுவும் வணிக ரீதியிலான பயன்பாட்டு வாகனங்களாகும். தற்காலிக பதிவு எண் கொண்ட வாகனமும் சிவப்பு நிற எண் பலகையுடன் இருக்கும். இது ஒரு மாதத்திற்கு செல்லத்தக்கது.
5/7
சிவப்பு நிற எண் பலகை: குடியரசு தலைவர், ஆளுநர் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் வாகனம். தற்காலிக பதிவு எண் கொண்ட வாகனமும் சிவப்பு நிற எண் பலகையுடன் இருக்கும். இது ஒரு மாதத்திற்கு செல்லத்தக்கது.
6/7
பச்சை நிற எண் பலகை: மின்சார வாகனம். வெள்ளை எழுத்துக்கள் இருந்தால் தனியார் வாகனம், மஞ்சள் எழுத்துக்கள் இருந்தால் அது வணிக வணிக ரீதியிலான பயன்பாட்டு வாகனம். நீல நிற எண் பலகை: வெளிநாட்டு தூதரக வாகனம்.