பர்கூர் தொகுதியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெ. ஜெயபிரகாஷ் வாக்கு சேகரித்தார்
கிருஷ்ணகிரி,ஏப்.8- கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ. ஜெயபிரகாஷ் பாளேத்தோட்டம் ஊராட்சியில் வாக்காளர் இடத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து பாரண்டப்பள்ளி, பனங்காட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பாளேத்தோட்டம் முன்னாள் ஊராட்சி செயலாளர் பைனான்ஸ் வேலு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.