மது போதையில் வீட்டின் முன்பு நின்றிருந்த கார் மீது காரில் மோதிய ரவுடி கும்பல்... நடவடிக்கை எடுக்க தயங்கும் டவுன் போலீசார்...?!
கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் நேற்று இரவு மது போதையில் ஸ்கார்பியோ காரில் வந்த கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த i20 கார் மீது மோதியது. அப்பொழுது i20 கார் உரிமையாளர் வந்து கேட்ட பொழுது நீ யாரை வேண்டுமானாலும் அழைத்து வா என்று கூறி அங்கேயே அமர்ந்து மது அருந்திய அந்த கும்பல் மேலும் சிலரை போன் செய்து வரவழைத்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நேற்று இரவு காணப்பட்டது. பின்னர் இது குறித்த தகவலின் பேரில் போலீசார் இரண்டு வாகனங்களையும் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். ஆனால் தற்பொழுது வரை எந்த ஒரு வழக்கும் பதியாமல் அவர்களை விடுவிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரவுடி கும்பல் நேற்று மதியம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெட்ரோல் பங்கில் சென்று பெட்ரோல் பங்க் உரிமையாளர் அமீன் என்பவரை மிரட்டி அவரது அலுவலகத்திலேயே தாக்கியுள்ளது. இந்த கும்பல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பழையபேட்டை பகுதியில் கண்ணில் மண்ணைத் தூவி ஒரு சிலரை சரமாரியாக தாக்கியது குறித்தும் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. தொடர்ந்து இதுபோன்று நகரத்தில் ரவுடிகளாக வளர்ந்து வரும் இவர்கள் மீது மாவட்ட எஸ்பி நேரடியாக தலையிட்டு விபத்து வழக்கு மட்டுமின்றி குடிபோதையில் எந்த ஒரு பயமும் இன்றி விபத்தை ஏற்படுத்திவிட்டு உரிமையாளரை மிரட்டியதோடு அதே பகுதியில் சாலையில் அமர்ந்து மீண்டும் மது அருந்தி மேலும் சிலரை அங்கு அழைத்து பிரச்சனையில் ஈடுபட்டது குறித்து தெளிவாக விசாரணை நடத்தி அவர்கள் மீது மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.