தளியில் பழமையான ஶ்ரீ ருகமினி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீசந்தான வேணு கோபால் சுவாமி கோயில் பிரம்மோற்சவம்

 தளியில் பழமையான ஶ்ரீ ருகமினி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீசந்தான வேணு கோபால் சுவாமி கோயில் பிரம்மோற்சவம்

ஓசூர் அருகே உள்ள தளியில் பழமையான ஶ்ரீ ருகமினி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீசந்தான வேணு கோபால் சுவாமி கோயில் பிரம்மோற்சவம் கடந்த 5 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஸ்ரீ வேணு கோபால் சுவாமி கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கபட்ட தேரில் ஶ்ரீ ருக்மினி  சத்யபாமா சந்தான வேணுகோபால் சுவாமி உற்சவ மூர்த்திகளை அமர வைக்கப்பட்டது. இதில் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், ஓசுர் அதிமுக  ஜெயபிரகாஷ், மற்றும் சௌபாக்கியவதி வேணுகோபால் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

 அதேப்போல சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தளி பகுதியை சேர்ந்த இஸ்லாமிய ஜமாத் கமிட்டியினர் பக்தர்களுக்கு குளிர் பானங்கள், பிரட், ஐஸ்கிரீம், பாதாம் ஆகியவற்றை பக்தர்களுக்கு வழங்கினர்.