தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

 தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வன சரகத்திற்கு உட்பட்ட பனைகாப்பு காட்டில் இருந்து வெளியேறிய, சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, 

பாலதொட்டனப்பள்ளியிலிருந்து சாவரபெட்டா செல்லும் சாலை அருகே லோகேஷ் என்பவரது பசுமை குடில் அருகே தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது உரசியதில் யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 

இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருவதுடன் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும்  இந்த பகுதிகளில் பெரும்பாலும்  ஏராளமான உயர் அழுத்த மின்சார கம்பிகள் அறுந்து தொங்குவதுடன் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டிருப்பதால் இது போன்ற மின் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக கூறும் சமூக ஆர்வலர்கள் இவற்றை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

B. S.Prakash

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்