ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

கள்ளச் சாராய விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய விவகாரத்தில் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்று சந்தேகப்படுவதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு நஷ்டஈடு கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ், ஆர்.எஸ்.பாரதிக்கு அனுப்பியுள்ள நோட்டீ
ஸில் கூறியிருப்பதாவது: உண்மைக்கு புறம்பான, தவறான கருத்துகளை கூறி, மக்கள் மத்தியில் அண்ணாமலையின் கண்ணியத்தை குலைக்கும் வகையிலும், களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அவதூறு கருத்துகளை ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இந்த நோட்டீஸ் பெற்ற 3 நாட்களில் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க ரூ.1 கோடியை மான நஷ்டஈடாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்