திண்டுக்கல் பள்ளி நிர்வாகி தாக்குதல் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு...

திண்டுக்கல் பள்ளி நிர்வாகி தாக்குதல் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு...

திண்டுக்கல் கணவாய் பட்டி TLV பப்ளிக் ஸ்கூல் நிர்வாகி திரு. ராஜேந்திரன் மீது 

2 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி கட்டணம் செலுத்தாத பெற்றோர் ராஜா முகமது என்பவர் கல்வி கட்டணம் கேட்டார் என்பதற்காக உடனடியாக

 டி.சி ,மார்க்சீட் தர வேண்டும் என்று வற்புறுத்தி இரும்பால் கொலை வெறி தாக்குதல் நடத்திய வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 

நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கம் தொடர்ந்து திண்டுக்கல் காவல்துறைக்கு அழுத்தம் தந்து தவறு செய்தவர் மீது 

FIR  போடப்பட்டு குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள். 

காவல்துறையின் வேண்டுகோள் மற்றும் உத்தரவாதத்தின் அடிப்படையில் நமது கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

இந்நிலையில் எதிர்காலத்தில் பள்ளி நிர்வாகிகள் யாருக்கும் இது போன்ற அவல நிலை வரக்கூடாது என்பதற்காகவும் நமது ஒற்றுமையை காட்டுவதற்காகவும் நாம் 22.07.24 தேதி திங்கட்கிழமை நடத்த திட்டமிட்டு இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளி நிர்வாகிகளும் இதர சங்க நிர்வாகிகளும்... யாரும் முழு ஒத்துழைக்காததால் மிகுந்த மன உளைச்சலோடு இப்படிப்பட்ட நன்றி கெட்டவர்களுக்காக நாம் காலம் முழுக்க உழைத்துக் கொண்டிருக்கிறோம். 

நமது வலியும் வேதனையும் நமக்கே தெரியவில்லை என்றால் நாம் வாழ்ந்து என்ன பயன்..

ஒரு பக்கம் ஆட்சியும் அதிகாரமும் நீதிமன்றமும் நம்மை நாளும் நசுக்க பார்த்தால் வேடிக்கை மனிதர்களைப் போல் விழுந்து கிடக்கும் பள்ளி நிர்வாகிகளை பார்த்து வேதனை தான் பட முடியும்.

பள்ளி நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் ஈகோவோடு 

தான் மட்டும் வளமோடும் நலமோடும் பாதுகாப்போடும்

வாழ்ந்தால் போதும் என்று எண்ணி வரும் சுயநலவாதிகளைக் கொண்டு நாம் என்ன செய்ய முடியும்? 

குறைந்தபட்சம் வாட்ஸ் அப்பில் கூட ஆதரவு தர முடியாத முதுகெலும்பு அற்றவர்களாக பள்ளி நிர்வாகிகள் உள்ளபோதும்...

அடி படுகிற போது புழு பூச்சிகள் கூட நெளிகிறது போராடுகிறது...

படித்தவர்கள் பண்பாளர்கள் 

நாம் என்ன செய்யப் போகிறோம்?....

விரைவில் நமது சங்கத்தின் மாநிலத் தலைமைச் செயற்குழு கூடி 

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பான கல்வி கட்டணம் கட்டவில்லை என்றாலும் 

டி.சி இல்லாமல் மாணவர்களை சேர்க்க வேண்டும்..

RTE கல்வி கட்டண பாக்கி....

தொடர் அங்கீகாரம் இல்லாமல் தவிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகள்...

சொத்து வரி கட்டாமல் இருக்க... உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்புக்காக  காத்துள்ளோம்.

விரைவில் நமது சங்கத் தலைவர்கள்

அனைவரும் ஒன்று கூடி மிக முக்கிய முடிவுகள் எடுத்து இனி எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக எவ்வாறு செயல்படுவது என்று நல்ல முடிவு எடுத்து உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். 

அதுவரை திண்டுக்கல்லில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.....

தனி மரம் தோப்பாகாது 

ஒரு கை ஓசை பலன் தராது

 தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்....

என்றும் சங்க பணியில்...

கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.