தேமுதிக சார்பில் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் ...

 தேமுதிக சார்பில் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் ...

*கிருஷ்ணகிரியில் தமிழக அரசு மின் கட்டண உயர்வு செய்ததை கண்டித்தும், நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*

கிருஷ்ணகிரி ஜூலை: 26   தேமுதிக கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, திமுக அரசு பொறுப்பேற்ற 3 வருட காலத்தில் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். உடனடியாக மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் எனவும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டை நீக்கி அனைத்து பொருள்களும் பொதுமக்களுக்கு கிடைத்திட வழி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய மாநில அரசு காவேரியில் இருந்து தண்ணீரை உடனடியாக பெற்றுத்தர வேண்டியும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே, தேமுதிக கிழக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர், பதாகைகளை கையில் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் S.சீனிவாசன் தனிமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக விவசாய அணி துணை செயலாளர் R.N.ராமலிங்கம் கண்டன உரையாற்றினார். மேலும் மாவட்ட கழக அவை தலைவர் கே.ஆர்.சின்னராஜ், மாவட்ட பொருளாளர் ஓம்சாந்தி சங்கர், மாவட்ட துணை செயலாளர் வேடியப்பன், முருகன், சிவகாமி பாலசுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மின்கட்டண உயர்வால் அவதியுறுவதை வலியுறுத்தி, மத்தூர் ஒன்றிய அவை தலைவர் அன்பு தலைமையில் தேமுதிகவை சேர்ந்த ஏராளமான பெண்கள் கிரைண்டர், மிக்ஸி, பயன்படுத்துவதை தவிர்த்து, மீண்டும் பழைய நிலைக்கு அம்மிக்கல், ஆட்டுக்கல், போன்றவை எடுத்து வந்து பெண்கள் சமைத்து சாப்பிட வேண்டும் என வலியுறுத்தி நூதன முறையில் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர்களான அரியப்பன், கே.பி.ரஞ்சித் குமார், A.K.வேலு, மற்றும்  ஒன்றிய கழகச் செயலாளர்களான முருகன், வஜ்ரவேல், காவேரிப்பட்டினம் விஜய் வல்லரசு, மத்தூர் மேற்கு விவேகானந்தன், ஊத்தங்கரை மேற்கு மாதேஸ்வரன், ஊத்தங்கரை கிழக்கு கதிர்வேல், போச்சம்பள்ளி அப்பாபிள்ளை, பர்கூர் எஸ்.ஆர்.பழனி, ஊத்தங்கரை பேரூராட்சி துரை, காவேரிப்பட்டினம் பேரூராட்சி ரமேஷ், பர்கூர் பேரூராட்சி மாதேஷ், கிருஷ்ணகிரி நகர அவைத்தலைவர் சங்கர் பொருளாளர் அமிர்தராஜன், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் பால்சுரேஷ், காவேரிப்பட்டினம் ஒன்றிய பொருளாளர் பி.சி.கணகன், கிருஷ்ணகிரி கிழக்கு IT WING பாலசுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஐடி WING, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

K. Moorthy. Reporter