இயக்குனர் பா. ரஞ்சித் தலித் மக்களின் தலைவர் ஆகிறாரா....?! தடுமாறும் திருமாவளவன்....!?

இயக்குனர் பா. ரஞ்சித்  தலித் மக்களின்  தலைவர் ஆகிறாரா....?!  தடுமாறும் திருமாவளவன்....!?

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணியில் கட்சி பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம் என இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்திருந்த நிலையில் விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 05ம் தேதி கொடூரமான முறை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட ரவுடிகள் மற்றும் திமுக, அதிமுக, பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் இன்று நினைவேந்தல் பேரணி நடைபெறுகிறது. கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம் என பா.ரஞ்சித் அழைப்பு விடுத்திருந்தார். 

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை தொடர்பான எந்த பேரணியிலும் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்:

 சில அரசியல் களத்திலே கூலியை வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற அரசியல் அறியாமையில் உளறுகிற அற்பர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு என்பதை, விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனை இயக்கத் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். 

விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிற நிலையில் நாம் அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்க கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் நாம் பங்கேற்கக் கூடாது. 

ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது அல்லது அந்த படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும். யாரோடும் இணைந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் அறிக்கைக்கு பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 திருமாவளவன் தற்போது திமுகவின் முழு கொத்தடிமையாகவே மாறிவிட்டார். முன்னுக்குப் பின் முரணாக பேசுவது அவருக்கு ஒரு வழக்கமாக ஏன் ஒரு வியாதியாகவே மாறிவிட்டது.

 தலித் மக்களின் ஒப்பற்ற தலைவன் ஒரே தலைவன் என்று கூறிக் கொள்ளும் அவர் திமுக அரசின் தலித் விரோத போக்கை கண்டிக்கும் திறன் அற்றவராகவே இதுவரை இருந்து வருகிறார்.  

வேங்கை வயல் ஆகட்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் ஆகட்டும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகட்டும் எல்லாவற்றுக்கும் இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க நினைக்கிறாரே தவிர இந்த துயரங்களுக்கெல்லாம் முடிவெடுக்கின்ற நிலையில் அவர் இல்லை.

 ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்ற முதலில் சொன்னவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு இது பாஜகவின் சதியாக இருக்கும் ஆளுங்கட்சிக்கு அவள் பெயர் படுத்த சில தலைவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.

 இந்த வழக்கில் சரண்டர் ஆன ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்ட போது அதைக் கண்டு கொள்ளவே இல்லை ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

இதையெல்லாம் கண்டித்து இயக்குனர் பா. ரஞ்சித் அறிக்கை வெளியிட்ட போது 2021 தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தேன் ஆனால் 2026 தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று அறிவித்தது அவருக்கு மிகப்பெரிய எரிச்சலை உண்டாக்கி இருக்கிறது. 

 தற்போது ஆளுங்கட்சிக்கு எதிராக ஆம்ஸ்ட்ராங் மரணத்துக்கு நீதி கேட்டு பேரணி நடத்துவது அவரே நிறையவே நிலை குலைய செய்துள்ளது. அதனால் தான் இப்போது இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதுவும் இல்லாமல் தலித் சமூகத்தில் தன்னைத் தவிர ஒரு தலைவர் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். 

 தற்போது மக்களிடத்தில் மிகவும் பிரபலமடைந்துள்ள இயக்குனர் பா. ரஞ்சித் தலித் மக்களுக்கு தீங்கிழைக்கும் ஆளும் கட்சியின் அடுக்கு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் அவர் எங்கு தலித் மக்களின் மாபெரும் தலைவராக மாறி விடுவாரோ என்கிற அச்சத்தில் தான் இப்படி எல்லாம் அறிக்கை வெளியிட்ட வருகிறார் என்று கூறுகின்றனர்.

இதற்கு அச்சாரம் போடும் விதமாகத்தான் சனிக்கிழமை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நடைபெற்ற பேரணி அதற்கு அச்சாரம் போடும் வகையில் அமைந்துள்ளது.,!