திம்ஜேப்பள்ளி ஊராட்சி ; 2 எலக்ட்ரானிக் சிட்டி-க்கு சமம்..! குட்டி ஜாம்ஷெட்பூர்..
தமிழகத்தின் ஓசூர் - திம்ஜேப்பள்ளி மற்றும் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் இரண்டும் சுமார் 2000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், இந்த இரண்டு நகரங்களையும் ஒரேயொரு ஒற்றுமையால் இணைக்கப்பட்டுள்ளன.
அதுதான் டாடா குழுமம். என்ன குழப்பமாக இருக்கிறதா..? எப்படி ஓசூர் திம்ஜேப்பள்ளி ஊராட்சியும், ஜாம்ஷெட்பூர்-ம் ஒன்றாகும்..? டாடா குழுமத்திற்கும் ஓசூர் திம்ஜேப்பள்ளி ஊராட்சிக்கும் என்ன தொடர்பு..?l
இந்தியாவில் முதல் திட்டமிடப்பட்ட தொழில் நகரம் என்றால் அது, ஜாம்ஷெட்பூர் தான் இது டாடா குழுமத்தால் நிர்வாகம் செய்யப்படும் சிறப்பான தொழில் நகரமாகும். ஜாம்ஷெட்பூர் நகரத்தை டாடா கையில் எடுக்கும் வரையில் இது ஒரு தூங்கும் கிராமமாக தான் இருந்தது.
இதேபோல் அடிக்கடி யானைகள் உட்பட காட்டு மிருகங்கள் நடமாடும் ஒரு குட்டி காட்டு கிராமமாக இருந்தது தான் ஓசூர் அருகில் இருக்கும் திம்ஜேப்பள்ளி ஊராட்சி.
தற்போது திம்ஜேப்பள்ளி-ஊராட்சியில் தான் டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது மாபெரும் ஐபோன் தொழிற்சாலையைச் செயல்படுத்தி வருகிறது. இதுதான் இரு கிராமங்களுக்கும் டாடா குழுமத்திற்கும் இடையிலான உறவு.
டாடா குழுமம் ஓசூர் அருகில் இருக்கும் திம்ஜேப்பள்ளி-ஊராட்சியில் தொழிற்சாலை அமைக்க துவங்கியது முதல் இப்பகுதியின் கலரே மாறிவிட்டது. தற்போது ஓசூரில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கும் பகுதியாகவும், முதலீட்டை ஈர்க்கும் பகுதியாகவும் உள்ளது.
"ஜாம்ஷெட்பூர்-க்கு ஒரு சிறந்த வரலாறு உள்ளது, இதேபோல் ஓசூர் ஜாம்ஷெட்பூர் திம்ஜேப்பள்ளி-ஊராட்சி பிளஸ் ஆக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
"டாடா தொழிற்சாலையைச் சுற்றி ஏராளமான உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ஜாம்ஷெட்பூர் உடன் ஒப்பிடுவது இயல்பான ஒரு விஷயம்,
ஆனால் திம்ஜேப்பள்ளி-யில் ஸ்டீல் போன்ற ஒரு குறிப்பிட்ட துறையைப் பார்க்கவில்லை, பல தரப்பட்ட உற்பத்தித் துறையில் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு உள்ளோம்." என தெரிவித்துள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள திறமையைக் கருத்தில் கொண்டு, ஓசூர் முக்கிய ஐடி ஹப் ஆக மாற வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
இதில் முக்கியமாக ஓசூர்-பெங்களூருக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் பெங்களூரில் நடத்த மேஜிக் ஓசூரிலும் நடக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
"தற்போது நடத்து வரும் உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும், நிறுவனங்கள் ஓசூரைப் பார்த்தால் அதன் உண்மையான மதிப்பும் வாய்ப்புகளும் தெரியும்.
ஓசூர் கிட்டத்தட்ட 2 எலக்ட்ரானிக் சிட்டிக்கு இணையானது." இதேபோல் ஓசூர் தொழில்துறைக்கு அன்னியமாக இல்லை, டிவிஎஸ், டைட்டன், அசோக் லேலேண்ட், ஏதர், ஒலா மற்றும் பிற நிறுவனங்களின் பிரிவுகள் இங்கு உள்ளன.
இதேவேளையில் டாடா குழுமம் உள்ளூர் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை மறுக்க முடியாது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் சில உயர்நிலை வேலைவாய்ப்புகளைக் கொண்டுவரும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.
TATA எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இங்கு துவங்கப்பட்ட பிறகு கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரமே மாறி உள்ளது. படித்தவர் படிக்காதவர் என்கிற பேதம் இல்லாமல் உயர்நிலை மேல்நிலை கல்லூரி படிப்பு என்று ஏதாவது முடித்தவர்கள் உடனடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
இந்த இரண்டு மாவட்டங்களிலும் TATA எலக்ட்ரானிக்ஸ் வாகனங்கள் செல்லாத கிராமங்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து கிராமங்களிலிருந்தும் இரவு பகல் என்று பாராமல் எல்லா வேலைகளிலும் பணியாளர்களை அழைத்துச் செல்வதும் அவர்களை உரிய நேரத்திற்கு இல்லம் தேடி அழைத்து வந்து விடுவதும் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பான்மையான தமிழ்நாட்டு இளைஞர்கள் போதை கலாச்சாரத்திற்கு அடிமையாகி உள்ள இந்த நிலையில் தினமும் காலையிலும், மாலையிலும், இரவிலும் கம்பெனியின் சீருடைய அணிந்து கொண்டு ஆண்களும் பெண்களும் சரிசமமாக கம்பீரமாக வருவதை பார்ப்பதற்கு பெருமையாக இருக்கின்றது. ஒரு நிர்வாகம் நன்றாக இயங்குவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
இந்த தொழிற்சாலை இங்கு உருவானதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தளி சட்டமன்ற உறுப்பினர் தோழர் T.ராமச்சந்திரன்.
இவர் எடுத்த பெரு முயற்சியின் காரணமாக தர்மபுரி - கிருஷ்ணகிரி இரண்டு மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மகளிர் மட்டும் இளைஞர்களுக்கு வாழ்க்கைக்கான உத்தரவாதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த தொழிற்சாலையை சுற்றி இன்னும் பல புதிய தொழிற்சாலைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உருவெடுத்துள்ளது. இந்த நிறுவனங்கள் எல்லாம் செயல்பாட்டிற்கு வருகின்ற போது இந்தப் பகுதியின் தலையெழுத்து வேறு மாதிரியாக இருக்கும்...!