தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!

 தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!


இந்தியாவின் மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனமான இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (IHCL) நிறுவனம் டாடா சன்ஸ் கட்டுப்பாட்டில் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தான் தாஜ் ஹோட்டல், விவாந்தா, ஜின்ஜர், SeleQtions போன்ற ஹோட்டல்களை நிர்வாகம் செய்து வருகிறது. ஓசூர் உடனும், தமிழ்நாட்டு அரசுடன் நீண்ட கால உறவு கொண்ட டாடா குழுமம் இப்பகுதியில் தற்போது அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.

குறிப்பாக டாடா எலக்ட்ரானிக்ஸ் வாயிலாக ஓசூரிஸ் டாடா குழுமம் பெரும் தொகையை முதலீடு செய்து குட்டி ஜாம்ஷெட்பூர் ஆக மாற்றி வருகிறது. இந்த நிலையில் டாடா-வின் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி இன்று ஓசூரில் ஒரு விவாந்தா மற்றும் ஒரு ஜிஞ்சர் ஹோட்டல்களை அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த கிரீன்ஃபீல்ட் ஹோட்டல் திட்டங்கள் 3 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

IHCL இன் ரியல் எஸ்டேட் மற்றும் வளர்ச்சி பிரிவின் நிர்வாக துணைத் தலைவர், சுமா வெங்கடேஷ் இத்திட்டம் குறித்து கூறுகையில், "ஓசூர், பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியால், தமிழ்நாட்டில் முக்கிய வணிக மையமாக உருவாகி வருகிறது. ஓசூர் தொழில்துறை பகுதிக்கும், பெங்களூர் நகரத்தை ஒட்டியிருக்கும் காரணத்தால் அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு ஹோட்டல்களை அமைக்கக் கையெழுத்திட்டு உள்ளோம்.

இந்த ஹோட்டல்களை பழனியப்பன் தலைமையிலான Chona Megatainment Malls நிறுவனத்தின் மூலம் டாடா குழுமம் கட்டுகிறது கூடுதல் தகவல். Chona Megatainment Malls மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (IHCL) நிறுவனமும் இன்று இரு ஹோட்டல் அமைப்பதற்கான ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தம் படி 150-அறைகள் கொண்ட விவந்தா ஹோட்டல், ஓசூரின் அதிரடியான வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் நவீன வடிவமைப்புடன், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும். இந்த ஹோட்டல்களில் விருந்தினர்கள் அனைத்து நேரங்களிலும் சாப்பிடும் உணவகம், சிறப்பு உணவகம் மற்றும் ஒரு பார் உள்ளிட்ட பல்வேறு உணவகங்களை கொண்டு இருக்கும். இந்த ஹோட்டலில் நவீன உடற்பயிற்சி கூடம், ஒரு நீச்சல் குளம் மற்றும் வணிக நிகழ்வுகளையும், கூட்டங்களையும் நடத்தும் வகையில் banquet ஹால் ஆகியவை இருக்கும்.

மேலும் ஓசூர் மக்களுக்கு ஆடம்பரமான ஹோட்டல் சேவையை வழங்கும் இலக்குடன் 200-அறைகள் கொண்ட ஜிஞ்சர் பிராண்டின் ஹோட்டல் அமைக்கப்படும். இங்கு அனைத்து நேரங்களிலும் சாப்பிடும் உணவகம், ஒரு பார், மற்றும் மீட்டிங் அறைகள் கொண்டிருக்கும். இந்த இரண்டு புதிய ஹோட்டல்களைச் சேர்த்து, IHCL தமிழ்நாட்டில் 22 ஹோட்டல்களை கொண்டிருக்கும், இதில் 6 பலவேறு கட்ட கட்டுமான பணிகளில் உள்ளன.


Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்