சென்னை கார் ரேஸை உதயநிதி நடத்தறதுக்கு நிவேதா பெத்துராஜ் காரணமா?
இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த மோட்டார்ஸ்போர்ட் (Motorsport) உலகமும், தற்போது தமிழக தலைநகர் சென்னையை (Chennai) உன்னிப்பாக கவனித்து வருகிறது. சென்னை ஃபார்முலா 4 கார் ரேஸ்தான் (Chennai Formula 4 Car Race) இதற்கு காரணம். சென்னைக்கு பெருமை சேர்க்க கூடிய இந்த மோட்டார்ஸ்போர்ட் திருவிழாவை, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) தொடங்கி வைத்தார். இதற்காக சினிமா பிரபலங்கள் உள்பட பல தரப்பினரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மறுபக்கம் சென்னை ஃபார்முலா 4 கார் ரேஸ், சமூக வலை தளங்களில் சர்ச்சை ஒன்றையும் கிளப்பியுள்ளது. சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெறுவதற்கு தமிழ் திரைப்பட நடிகையான நிவேதா பெத்துராஜ்தான் (Nivetha Pethuraj) காரணம் என சமூக வலை தளங்களில் பலரும் பேசி வருகின்றனர்.
அத்துடன் சென்னை ஃபார்முலா 4 கார் ரேஸில் நிவேதா பெத்துராஜ் கலந்து கொள்ளவிருப்பதாக பலர் பேசி வருவதையும் சமூக வலை தளங்களில் நம்மால் பார்க்க முடிகிறது. இது தொடர்பான மீம்ஸ்கள் (Memes) சமூக வலை தளங்கள் அனைத்திலும் கட்டுக்கடங்காமல் பரவி கொண்டுள்ளன.
ஆனால் இவை எதுவுமே உண்மை கிடையாது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், நடிகை நிவேதா பெத்துராஜையும் இணைத்து கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அவற்றை மறுத்து, நிவேதா பெத்துராஜ் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
Nivetha Pethuraj Certificate
தவறான தகவல்களை பரப்புவதற்கு முன்னால் கொஞ்சம் சிந்தியுங்கள். நான் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களை போல், நானும் தொடர்ந்து அமைதியான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்'' என நிவேதா பெத்துராஜ் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், தற்போது சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெறுவதற்கு காரணமே நிவேதா பெத்துராஜ்தான் என பலரும் யூகங்களை கிளப்பி வருகின்றனர். அவர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், நிவேதா பெத்துராஜ் கார் ரேஸில் கலந்து கொள்வதற்கு ஏற்ற உடையில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஆனால் உண்மையில் அவர் சென்னை ஃபார்முலா 4 கார் ரேஸில் கலந்து கொள்ளவில்லை. சென்னை ஃபார்முலா 4 கார் ரேஸில் கலந்து கொள்ளும் டிரைவர்களின் முழுமையான பட்டியல் (Drivers List) சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதில், நிவேதா பெத்துராஜின் பெயர் இல்லை.
அப்படியானால் நிவேதா பெத்துராஜ், 'கார் ரேஸிங் சூட்' உடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பற்றி உங்களுக்கு சந்தேகம் வரலாம். ஆனால் உண்மை என்னவென்றால், நிவேதா பெத்துராஜ் அடிப்படையிலேயே ஒரு கார் ரேஸர்தான்! இதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. நிவேதா பெத்துராஜின் கார் ரேஸிங் சான்றிதழை நீங்கள் மேலே புகைப்படமாக பார்க்க முடியும்.
கோவையில் (Coimbatore) உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே டிராக்கில் (Kari Motor Speedway Track), கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சி திட்டத்தின் முதலாவது லெவலை நிவேதா பெத்துராஜ் வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக வழங்கப்பட்ட சான்றிதழ்தான் இது.
அடிப்படையிலேயே கார் ரேஸர் என்பதால், நிவேதா பெத்துராஜை 'கார் ரேஸிங் சூட்' உடன் பார்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும், சென்னை ஃபார்முலா 4 கார் ரேஸிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலமாக நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
உலக விளையாட்டு வரைபடத்தில் சென்னையை மீண்டும் இடம்பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இங்கு ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்தப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அத்துடன் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை எழுந்தபோதே, சென்னையில் கார் ரேஸ் நடைபெறுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதை நிவேதா பெத்துராஜூம் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் கார் ரேஸிங் என்பது தன்னுடைய 'பேஷன்' என்பதையும் அவர் பொதுவெளியில் விளக்கியுள்ளார். எனவே எந்தவொரு தகவலையும் சமூக வலை தளங்களில் பகிர்வதற்கு முன்னால், அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து கொள்வது நல்லது.