காலாண்டு விடுமுறை நீட்டிப்பு! ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி!!

 காலாண்டு விடுமுறை நீட்டிப்பு! ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக். 2ஆம் தேதியுடன் நிறைவு பெற்று, அக். 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அக். 6ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள், காலாண்டு விடுமுறை முடிந்து அக்.7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலாண்டுத் தோ்வுக்குப் பின் அளிக்கப்படக் கூடிய விடுமுறையில் தான் மாணவா்களின் விடைத்தாள்களை ஆசிரியா்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றை சரிபாா்த்து எமிஸ் இணையத்தில் மாணவா்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விடுமுறை முடிவதற்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து தோ்ச்சி சதவீதத் தகவலைக் கேட்டு அதிகாரிகள் நெருக்கடி அளிப்பா். எனவே, பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டுகளைப் போல, மாணவா்களுக்கான விடுமுறையை 9 நாள்கள் என்ற அடிப்படையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில்தான் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான காலாண்டுத் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து  அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது.

காலாண்டு விடுமுறை நீட்டிக்கக் கோரி ஆசிரியா்கள் சங்கத்தினா் வைத்த கோரிக்கையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், காலாண்டுத் தோ்வுக்குப் பிறகு வழங்கப்படும் விடுமுறையானது, முந்தைய ஆண்டுகளில் 9 நாள்கள் விடப்பட்டன. ஆனால் நிகழாண்டில் செப். 28 முதல் அக். 3 வரை ஐந்து நாள்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

 இதில், வழக்கம்போல சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் ஆகும். அதன்பிறகு, அக். 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையாகும். அவ்வாறு பாா்க்கும்போது, இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை என்பது உள்ளது. 

அக். 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 5-ஆம் தேதி ஒரு நாள் பள்ளிகள் இயங்க, மீண்டும் சனி, ஞாயிறு விடுமுறையாக உள்ளது. எனவே, அக். 3,4, ஆகிய இரு தினங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால், சனி, ஞாயிறுடன் சோ்த்து 9 நாள்கள் காலாண்டுத் தோ்வு விடுமுறையாக மாணவா்களுக்கு கிடைக்கும். மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் நல கூட்டணி கோரிக்கை வைத்திருந்தது.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் அரசு இப்போது விடுமுறையை அறிவித்துள்ளது.

இதை ஆசிரியர் சமுதாயம் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாலும் பெற்றோர்கள் தமிழக அரசு திட்டி தீர்த்துக் கொண்டுள்ளனர்.

 இவர்கள் கோரிக்கை வைத்த உடனே ஊடகங்களும் இதை பெரிதாக விவாதித்த நேரத்தில் பெற்றோர்களும் பொதுமக்களும் மிகுந்த கோபத்திற்கு உள்ளானார்கள்.

வேலைக்கு போகாதவர்கள் விடுமுறை கேட்கிறார்கள் இதற்கும் இந்த அரசு செவி சாய்க்கும் என்று விமர்சித்தார்கள்.

 இவர்கள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் இவர்களுக்கு மட்டும் அள்ளி அள்ளி வழங்குகிறார்கள் இவர்களுக்குள் அப்படி என்ன ஒரு கள்ளக் கூட்டணி என்கிற சந்தேகத்தை எழுப்பி வருகிறார்கள்.

வாரத்தில் ஒரு நாள் வெள்ளி, சனி, ஞாயிறு வந்து விடக்கூடாது இதற்கு முன் ஒரு நாள் விடுமுறை வந்து விட்டால் இதற்கும் சேர்த்து விடுமுறை கேட்பது இவர்களின் வியாதியாக இருக்கிறது. அதற்கும் இந்த அரசு செவி சாய்கிறது என்று சொன்னால் இதைவிட கேவலம் அடிமைத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

அரசாங்கத்தின் பேச்சை தான் ஆசிரியர்கள் கேட்க வேண்டுமே தவிர ஆசிரியர்கள் பேச்சை அரசாங்கம் கேட்க கூடாது. இங்கு எல்லாமே தலைகீழாக நடக்கிறது. தமிழகத்தில் ஆசிரியர்கள் பேச்சைக் கேட்டுத்தான் அரசு செயல்படுகிறது. பல விஷயங்களில் இது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. 

 7.5 சதவீதம் தொடங்கி அனைத்துமே இவர்களை காப்பாற்றுவதற்காக தான் இருக்கிறது தவிர மாணவர்கள் நலனுக்காக இல்லை.

ஒரு காலத்தில் ஆசிரியர் பேச்சை கேட்கின்ற மாணவன் உருப்படுவான், சமுதாயம் உருப்படும் என்கிற நிலை இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை.

இந்த நிலையில் தங்கள் சுய நலனை மட்டும் பெரிதாக மதிக்கின்ற ஆசிரியர்களின் பேச்சு கேட்கின்ற இந்த அரசாங்கம் உருப்படுமா...? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசு இதற்கு மேலாவது சிந்திக்க வேண்டும்...!!