பொய்யான தகவல்களைப் பரப்புவது பொய்யாமொழிக்கு அழகல்ல
பொய்யான தகவல்களைப் பரப்புவது பொய்யாமொழிக்கு அழகல்ல திரு. அன்பில் மகேஷ் அவர்களே,
ஒப்புதல் அளித்து கையெழுத்திடாத ஒரு திட்டத்திற்கு, நிதி மட்டும் வேண்டும் என்று நீங்கள் அடம் பிடிப்பதைப் பார்த்தால் உண்மையில் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
அனைவருக்கும் சமமான தரமான கல்வியை உறுதிசெய்யும், நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் “PM SHRI” பள்ளிகள் திட்டத்தின் கீழ், 14,500 பள்ளிகளும் அதன்மூலம் 1.8 மில்லியன் மாணவர்களும் பயனடையும் நிலையில்,
உங்கள் அரசியல் லாபத்திற்காக அந்த சிறந்த தரமான கல்வி வாய்ப்பு தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கவிடாமல் அரசியல் செய்து கொண்டிருக்கும் உங்களிடம் சில கேள்விகள்:
📝“PM SHRI” பள்ளிகளை நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்காத மாநிலங்களுக்கு, அதற்கான நிதியை மத்திய அரசால் ஒதுக்க இயலாது என்ற அடிப்படைக் கோட்பாடு உங்களுக்கு தெரியாதா?
📝இந்த அடிப்படையை உணர்ந்த தமிழக அரசு, “PM SHRI” பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புவதாக, அப்போதைய தலைமைச் செயலர் திரு. ஷிவ் தாஸ் மீனா IAS அவர்கள் மூலம், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாவது உங்களுக்கு தெரியுமா?
📝அதற்கு அடுத்த நாளே, மாநில அளவில் குழு அமைக்கப்பட்டு “PM SHRI” பள்ளிகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நீங்களே உங்கள் வாயால் கூறினீர்களே, அது நினைவிருக்கிறதா?
📝அவ்வாறு அமைக்கப்பட்ட மாநிலக் குழுவின் பரிந்துரைகள் பற்றி எவ்வித தகவல்களும் வெளியாகவில்லையே ஏன்?
📝நீங்கள் கூறியபடி, “PM SHRI” பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகம் கையெழுத்திட்டதா?
📝அல்லது ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் அதற்கான நிதியை மட்டும் கறாராகக் கேட்பதுதான் திராவிட மாடலின் ஸ்டைலா?
📝தமிழ்மொழியைக் காப்பதாகக் கூறி, மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் உங்கள் நிர்வாகத்தின் கீழ், தமிழில் எழுதப்படிக்கக் கூட தமிழக மாணவர்கள் தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது ஏன்?
இவ்வாறு, உங்களது நிர்வாகக் குறைபாடுகளையும், நிர்வாகத் திறனின்மையையும் மூடி மறைக்க, “ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்கு(SSA) நிதி வழங்காமல், மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது” என்று வாய் கூசாமல் தொடர்ந்து பொய் வதந்திகளை ஏன் பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்❓