RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........

 RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் RTE Reimbursement 25% கல்வி கட்டண வழக்கில் அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அந்த கட்டணத்தை வழங்கிட வேண்டும். 

LKG , UKG வகுப்புகளுக்கு Rs 6000 மட்டும் வழங்குவது தவறு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு குறைத்து கல்வி கட்டணம் வழங்குவதில்லை...

என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தோடுத்தோம் .

அந்த வழக்கின் தீர்ப்புப்படி 2018 ஆம் ஆண்டில் இருந்து நிலுவைத் தொகையை கணக்கிட்டு நியாயமான கல்வி கட்டணம்  4 வாரங்களுக்குள் வழங்கிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர் என்கிற மகிழ்ச்சியான செய்தியை அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்...

அதேபோன்று....

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நீண்ட நெடுங்காலமாக வைத்து வந்த கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்த்து இருக்கிறது...

அதற்காக மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், மற்றும் பள்ளி கல்வித்துறைக்கும் நமது மாநில சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

1..நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும்...

2.. அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கிட வேண்டும். 

3.. பழைய பள்ளி கட்டிடங்களுக்கு DTCP/CMDA .....

Planing Area,

Non Planning Area இரண்டுக்கும் உள்ளது உள்ளபடியே கட்டிட அனுமதி வழங்கிடவும்...

தமிழக அரசு முன்வந்துள்ளது...

மேற்கண்ட 3 கோரிக்கைகளும் தனியார் பள்ளிகளின் தலையாயப் பிரச்சனைகள்...

மேற்கண்ட பிரச்சனைகள் தீர்ப்பதற்கு...

தமிழக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று பள்ளி கல்வித்துறை மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உள்ளதால்....

 பள்ளி நிர்வாகிகள் அனைவரும் அதற்கான கோப்புகளை தயார் செய்யவும்...

நிரந்தர அங்கீகாரம் பெறவும் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தயாராக இருக்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறோம்...

தனிமரம் தோப்பாகாது ....

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு... என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறோம்..

 இதே ஒற்றுமையோடு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் அதுவும்.... தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் செய்து காட்டும்.....

வாழ்த்துக்களுடன் உங்கள் 

கே. ஆர். நந்தகுமார்.

மாநில பொதுச் செயலாளர் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள்.