தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் பொதுக்குழுகூட்டம்

 தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் பொதுக்குழுகூட்டம் 

06.10..2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் பொதுக்குழுகூட்டம் காலை 9 மணிக்கு கிளாப்பாளையம் கிராமத்தில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் மாநிலத் தலைவர் S.மதிவாணன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் G.முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர் . வரவேற்புரை மாநில அமைப்பு செயலாளர் ஆசனூர் ரவி அவர்கள் வழங்கினார்.மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் செல்லூர் மாரி மாநில சிறப்புத் தலைவர் துரைசாமி மாநில கௌரவத் தலைவர் விஜயகுமார் மாநில ஆலோசகர் பம்பை ராஜேந்திரன் , மாநில செயல் தலைவர் அங்கனூர் முருகன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தொப்பையான் குளம் குமார், ராமச்சந்திரன்,கிளாப் பாளையம் ஐயப்பன் , பாலு, புத்தனந்தல் பிரகாஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மோட்சம், கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் சோழ பாண்டியன் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் புதுப்பிக்கப்பட்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.