பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

 பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.     

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் போன ஆண்டு பருவத்தில் கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2735 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.ஆனால் ஒரு டன் கரும்பின் விலை 2950 ரூபாய் மீதமுள்ள  பிடித்தம் செய்யப்பட்ட தொகை செலுத்தப்படாமல் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் மறு வருடம் மில் திறக்கப்படும் போதுதான் அந்த தொகை செலுத்தப்படுகிறது இதனால் விவசாயிகளுக்கு எந்த ஒரு லாபமும் ஏற்படப் போவதில்லை .அது மட்டுமல்லாமல் கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.விவசாயிகள் கடன் வாங்கி வெட்டு கூலி மாமுல் போன்றவற்றை செலவு செய்து பயிரை விளைவித்து ஆலைக்கு அனுப்பினால் அந்த தொகை சரியான நேரத்தில் விவசாயிகளை வந்தடைவதில்லை எனவே அந்த பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.               எனவே தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக தீபாவளிக்குள் வழங்கினால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்  .என்று தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கம் தமிழரின் மேலருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்