படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வழக்கறிஞருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
ஓசூரில் வழக்கறிஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டிய ஆனந்த் நீதிமன்றத்தில் சரண். படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வழக்கறிஞருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு குற்றவியல் வழக்குகளை நடத்தி வரும் பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு வெளியே வரும் பொழுது ஆனந்த் என்பவர் வழக்கறிஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அருகில் இருந்த JM 2 நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இதனால் தாலுக்கா அலுவலகம் நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வழக்கறிஞர் கண்ணன், ஆனந்த் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனந்தின் மனைவியும் ஓசூரில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதாக தகவல்.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எஸ் பி தங்கதுரை சமாதானம் பேசியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது..