சட்டவிரேதமாக விற்பனை செய்யப்படும் மது விற்பனை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை

 சட்டவிரேதமாக விற்பனை செய்யப்படும் மது விற்பனை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி அருகே உள்ள பூவத்தி கிராமத்தில் 24 மணி நேரமும் சாலையோரக்கடைகளில்  சட்டவிரேதமாக விற்பனை செய்யப்படும் மது விற்பனையை தடுத்திட வழியறுத்தி கண்டன கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர், புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கிராம மக்கள் ஆதங்கம் .

.........................................................

கிருஷ்ணகிரி  மாவட்டம் ஆலப்பட்டி அருகே உள்ள பூவத்தி கிராமத்தில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது,

இங்கு கிருஷ்ணகிரி இராயக்கோட்டை சாலை பிராதான சாலையாக இருப்பதால் என்னோரரும் ஆயிரக்கணக்கான

வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையோரங்களில்  பெட்டி கடைகளில்  திருட்டுத்தனமாக கர்நாடகா மாநில மதுப்பானங்களை வாக்கி வந்து 24 மணி நேரமும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் அப்பகுபதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது,

மேலும் குடித்து விட்டு சாலையை கடக்கும் போது அதிகப்படியான விபத்துக்களும் அதிகரித்து உள்ளது,

திருட்டுத்தனமாக விற்பனை செய்யும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இது வரை எந்த நாடவடிக்கையும் எடுக்காதால் பூவத்தியை சேர்ந்த இளைஞர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது சட்ட விரதமாக சாலையோரக் கடைகளில் மறைத்து வைத்து விற்பனை செய்யும் கடைகளை அப்புறப்படுத்திட வேண்டும் என வழியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் கூறுகையில் பூவத்தி கிராமம் குடிகாரர்களின் கிராமமாக மாறி உள்ளது வீடுகளில் நிம்மதி இல்லை தினமும் சட்டை சச்சரவுகளுடன் வாழ வேண்டிய நிலை பள்ளி அருகிலேயே மறைத்து வைத்து மதுபானங்கள் தடை இன்றி விற்பதால் வெளியில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது,

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு புகார் கொடுத்தும் அவர்கள் கட்டு கொள்வது இல்லை, இதனால் பள்ளி வயது பசங்களும் மது போதைக்கு அடிமையாவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது ஆகையால் சாலையோரக்கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டு வருவதால் பூவத்தி என்ற கிராமமே மதுவிற்கு அடிமையான கிராமமாக மாறியுள்ளது,

ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரங்கள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பெட்டிக் கடைகளை அகற்ற வில்லை என்றால் பெண்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு கொடுக்கப் போவதாக தெரிவித்தனர்.

பேட்டி, கிராம மக்கள்.