மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்...

 மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் திமுக அரசு கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம், அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் கைது.*

கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் அதிமுக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார் எம் எல் ஏ அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார், அப்போது பேசிய கேபி முனுசாமி  தமிழகத்தில் கஞ்சா அபின் போன்ற போதை பொருள் கடத்தல் காரர்களுக்கு திமுக அரசு பாதுகாப்பாக இருந்து வருகிறது, மாறாக தமிழகத்தில் மாணவிகளுக்கும் பெண்களுக்கும் ஏன் காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவலர்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக தெரிவித்தார் மேலும் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் போது அங்கு சமாதானத்திற்கு சென்ற உதவி பெண் காவல் ஆய்வாளர் அவர்களை அங்குள்ளவர்கள் பெண் காவலரின் சடையை பிடித்தெடுத்து தாக்குதல் நடத்திய கூடிய ஒரு அவல ஆட்சி இங்கே நிலவுகிறது அப்படிப்பட்ட ஆட்சியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும், அப்படி டிஸ்மிஸ் செய்யக்கூடிய இடத்தில் மக்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள் எனத் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி வி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கேபி முனுசாமி அவர்களது பேச்சை இடைமறித்த காவல்துறையினர் ஆர்ப்பாட்ட மேடைக்கு சென்று அவரை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து கைது செய்ய முற்பட்டனர் அப்போது கட்சி தொண்டர்கள் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...

இதனைத் தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

K.Moorthi, Reporter கிருஷ்ணகிரி மாவட்டம்*

Popular posts
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா ...!
படம்
அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம்..!?
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
அமைதிக்கு பெயர் தான் சாந்தி....! அதிகம் பேசாமல் இருப்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்...!!