ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக போட்ட கண்டிஷன்.,! ஆடிப்போன காங்கிரஸ் .....!!
ஈரோடு கிழக்கில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுவதற்காக தொகுதியை கைப்பற்ற கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் முயற்சி எடுத்திருக்கிறார். தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே திமுக ஒதுக்க வேண்டுமாயின், ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்திலிருந்து ஒருவர் களமிறங்க வேண்டும்.
அப்படியிருந்தால் மட்டுமே திமுகவிடம் தொகுதியைக் கேட்டுப்பெற முடியும் என முடிவெடுத்து, இளங்கோவன் குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார் செல்வப்பெருந்தகை. ஆனால் அவர்களோ, "வேலையைப் பாருங்க. இனி எங்களுக்கு அரசியலே வேண்டாம்" என்று முகத்தில் அறைந்த மாதிரி செல்வப்பெருந்தகையிடம் சொல்லி விட்டனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் விழித்திருக்கிறார்.
இதற்கிடையே, திமுக தலைமையிடம், "தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்" என தகவல் சொல்ல, "அப்படியானால் தேர்தலுக்கு இவ்வளவு இத்தனை கோடிகள் செலவாகும். அதனை ரெடி பண்ணிட்டுச் சொல்லுங்கள் என்றிருக்கிறது அறிவாலயம். அதே சமயம், தேர்தல் செலவு என திமுக தரப்பில் சொல்லப்பட்ட தொகையைக் கேட்டு ஆடிப்போய்விட்டாராம் செல்வப்பெருந்தகை என்று காங்கிரஸ் தரப்பிலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.