தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையே.....
விடுமுறை காலங்களில் சனி, ஞாயிறுகளில் பள்ளிகளை நடத்தாதே,சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு தமிழ்நாடு முழுக்க பட்டி தொட்டி எங்கும் அரசு பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறார்கள்.
ஆனால் தனியார் பள்ளி டி.இ.ஓ மற்றும் சி.இ ஓ. க்கள் தனியார் பள்ளிகளில் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளை எச்சரிக்கும் விதமாக ஆடிய வெளியிட்டும் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்கள்.
இது என்ன பாரபட்சம் ?
ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கும் வேலையை அரசு அதிகாரிகள் செய்யக்கூடாது.
தனியார் பள்ளிகள் மாநாட்டில் தனியார் பள்ளிகள் இயக்குனர் பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் என்று அறிவித்தார்.
கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளுக்கும் 10 மற்றும் 11 ,12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் 100% வெற்றி பெற்று அவர் வாழ்வை உயர்த்த வேண்டும் என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் இணைந்து தங்கள் கடும் உழைப்பால் மாணவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சிக்கு தடையாக உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்...
தரமற்ற கேள்வித்தாள்களை தனியார் பள்ளிகள் மீது திணித்து அரசு பள்ளியை மட்டும் சிறப்பாக காட்டிக் கொள்ள சதி நடக்கிறதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பள்ளி பெற்றோர்களிடம் சம்மத கடிதம் பெற்று தமிழ்நாடு முழுக்க அனைத்து பள்ளிகளும் தேவைப்படும் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தந்து தேர்வில் 100% மதிப்பெண் பெறவும் வெற்றி பெறவும் வேண்டிய பணிகளை விரைந்து செய்யுங்கள்...
அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தரமான கல்வியை உறுதி செய்யுங்கள்.
இந்த ஆண்டு இன்னும் 10 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க முயற்சி செய்யுங்கள்...
தனியார் பள்ளிகள் சிறப்பு நடப்பதை தடுக்கும்... மிரட்டும் கல்வி அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு புகார் அளிப்போம்.நடவடிக்கைகள் மேற்கொள்வோம்..
தமிழ்நாடு முழுக்க அரசு பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை புகைப்படம் எடுத்து அரசுக்கு அனுப்புங்கள்.
பள்ளி நிர்வாகிகள் கவலைப்பட வேண்டாம் ...
தரமான கல்வி, வழங்குவதையும், குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்
வாழ்த்துக்களுடன்
கே.ஆர்.நந்தகுமார்.
மாநில பொதுச் செயலாளர். தனியார் பள்ளிகள் சங்கம்.
19.01.2025.