பூசாரிபட்டி கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்

 பூசாரிபட்டி கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்

 கிருஷ்ணகிரி ஜன:-07  கிருஷ்ணகிரி அருகே உள்ள பூசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி வயது 68 என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் புகார் மனு ஒன்றினை கொடுத்தார் அந்த மனுவில் கூறி இருப்பதாவது கடந்த 60 வருடமாக பூசாரிபட்டி கிராமத்தில் வசித்து வருவதாகவும்

என் கணவர் கடந்த 2009 ஆம் வருடம் இயற்கை எய்து விட்டார் அவருடைய தம்பி ராமன் என்பவர் தங்களது குடும்பத்திற்கு தெரியாமல் தங்களது பூர்வீக சொத்தினை எனது கணவர் இறந்தவுடன் எங்களுக்கு தெரியாமல் விற்று இருக்கிறார் இது குறித்து தாங்கள் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுத்து இருப்பதாகவும் அந்த வழக்கினை வாபஸ் பெற சொல்லி கிராமத்தில் உள்ள ஊர் கவுண்டர்கள் மிரட்டுவதாகவும் வாபஸ் பெற மறுத்ததின் காரணமாக எங்கள் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், எங்களோடு யாரேனும் பேசினால் 50,000 அபராதம் விதிப்பதாகவும் கிராம கோவிலுக்குள் அனுமதிப்பதே இல்லை எங்களுடைய உறவினர் கடந்த வாரம் இறந்த நிலையில் அந்த சாவிற்கு செல்ல கூட அனுமதிக்கவில்லை இது குறித்து ஊர் கட்டுப்பாடு என்று எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர் இது குறித்து மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மனுவில் தெரிவித்துள்ளார் மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஊர் கவுண்டர்கள் யாரிடத்தில் புகார் கொடுத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

K. Moorthy Krishnagiri Reporter 

Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்