lசமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு துவங்க பெற்றோரின் ஒப்புதல் தேவை..!

 சமூக வலைதளங்களில்  குழந்தைகள் கணக்கு துவங்க பெற்றோரின் ஒப்புதல் தேவை..!

இன்றைய இணைய உலகம் இளசுகளை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டுள்ளது. ஒரு செல்போனில் விரல் நுனியில் அனைத்தையும் தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கும் நாம், நமக்கு தெரியாமலேயே அடிமையாகி கொண்டு வருகிறோம் என்பதை உணர மறுக்கிறோம்.

குறிப்பாக ஒவ்வொருவரும் குறைந்தது ஏதேனும் ஒரு சமூக வலைதளத்திலாவது உலாவி கொண்டுதான் இருக்கிறோம். குறிப்பாக குழந்தைகளும் கூட சமூக வலைதளத்தில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அவர்களும் தனித்தனி அக்கவுண்டை உருவாக்கி, பயன்படுத்தி வருகின்றனர்.

அதிக நேரங்களை சமூக வலைதளத்தில் செலவிடுவதால் குழந்தைகளின் மனநிலை, கல்வி போன்றவை பாதிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு ஆஸி.,யில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அந்நாடு தடை விதித்தது வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிகளை மத்திய அரசு கருத்துக் கேட்புக்காக வெளியிட்டு உள்ளது.

இதன்படி, சமூக வலைதளங்களில் ' இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கை துவங்குவதற்கு பெற்றோர் அனுமதியை பெற வேண்டும். கணக்கு துவங்கப்படுவதற்கு முன்னர் இதனை வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவிலும் இந்த சட்டம் விரைவில் அமுல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிறது.