அனைவருக்கும் அரசாங்க வேலை...?! இது எளிதில் சாத்தியம்...!! கல்வியாளர் முத்துக்குமரன் கூறுவது என்ன...?
இன்றைய சூழ்நிலையில் அரசாங்க வேலை என்பது குதிரை கொம்பாக தான் அனைவருக்கும் தெரிகிறது. அதுவும் அனைவருக்கும் அரசாங்க வேலை என்பது அத்தைக்கு மீசை முளைத்த கதையாக உள்ளது. இந்த நிலையில் இது எளிதில் சாத்தியம் என்று கூறுகிறார் தர்மபுரி கமலம் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் சி. முத்துக்குமரன்.
வளர்ந்து வரும் இந்திய தேசத்தில் பல தொழில்கள் நாள்தோறும் பெருகி வளர்ந்து வருகின்றன. வேலை கிடைக்கவில்லை என்று மக்கள் ஒரு பக்கம் அலைந்து கொண்டிருந்தாலும் வேலை செய்வதற்கு தகுதியான பணியாட்கள் கிடைப்பதில்லை என்று தொழிலதிபர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலைதான் தொடர்கிறது.
விவசாயம், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கட்டுமான தொழில் நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், சுய தொழில் செய்வோர் என்று பலரிடத்திலும் பல விதமான வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது.
இவை அனைத்துமே ஒரு பாதுகாப்பு, உத்தரவாதம் இல்லாத நிலையில் உள்ளதால் உறுதியாக யாருமே இந்த வேலை வாய்ப்புகளில் தொடர்வதில்லை. இந்த நிலையை நீக்க அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து வேலைகளையும் அரசுடைமை ஆக்கினால் இந்த நிலை மாறுபட்டு விடும்.
இன்றைக்கு பல தனியார் நிறுவனங்கள் பணியாளர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வகையில் அரசுக்கு இணையான ஊதியத்தை அவர்களுக்கு வழங்கி வருகின்றன. அதன் அடிப்படையில் அனைவருக்கும் ஊதியம் வழங்கியிருந்தாலே போதுமானது தான்.
இதை முறைப்படுத்தி தனியார் பங்களிப்பு 80% அரசின் பங்களிப்பு 20% இந்த சேர்த்து வழங்கி பணி உத்தரவாதம் வழங்கினால் படித்தவர் படிக்காதவர் என்று அனைவரும் சுபிட்சமாக வாழும் நிலை ஏற்படும்.
அனைவரும் உழைக்க தயாராகி விட்டால் இந்த நாட்டில் பஞ்சம் பட்டினி என்பது இருக்காது.
இப்போது 500 ரூபாய்க்கு குறைவாக யாரும் கூலி வாங்குவதில்லை. இது அவர்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றார் போல் மாறுபடும். எப்படியும் தனிமனித ஒரு மாத ஊதியம் என்பது ரூபாய் 15 ஆயிரத்தை தாண்டி செல்லும். இந்த 15000 ஊதியம் என்பது சாமானியமானவர்களுக்கும் சாத்தியமானது தான். அரசாங்கம் 100 நாள் வேலை ஆட்களுக்கு கொடுக்கின்ற சம்பளத்தை விட அதிகம் தான்.
அரசாங்கத்தின் பங்களிப்பாக கொடுக்கின்ற 20% தொகையில் 10% தொழிலாளர்களுக்கு வழங்கினாலும் மீதமுள்ள 10% தொகையில் அனைவருக்கும் இலவச கல்வி அனைவருக்கும் இலவச மருத்துவம் அனைவருக்கும் பொது காப்பீடு அனைவருக்கும் ஓய்வூதியம் வணங்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார்.
இவரின் இந்த முயற்சிக்கு அரசு செவி சாய்குமா....?