பால் முகவர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
ஓசூர், பிப். 17–
கிருஷ்ணகிரி மாவட்ட பால் முகவர்கள் அசோசியேஷன் அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஆலோசனை கூட்டம் ஓசூரில் உள்ள ராயக்கோட்டை சாலையில் நேற்று நடந்தது. தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் அலுவலகத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் பங்கேற்று, பால்முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அவர் பேசும் போது பால் விநியோகம் ஒரு உன்னதமான தொழில். அரசின் சட்ட திட்டங்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு தரமான சுத்தமான பாலை விநியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமையா, பால் முகவர்கள் அசோசியேஷன் துணைத்தலைவர்கள் ஜீவானந்தம், விஜயபாஸ்கர், பொருளாளர் சத்தீஸ், செயலாளர் வேடியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
E. V. Palaniyappan. Reporter