கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கிருஷ்ணகிரி,மார்ச்.14- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி புதிய தலைவியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் எம்.எஸ்.சுகந்திமாது-வை அதிமுக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி பரிந்துரையின்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமியை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எஸ். சுகந்திமாது நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். இதை தொடர்ந்து பெத்ததாளாப்பள்ளியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே. அசோக்குமார் எம் எல் ஏ, ஒன்றிய கழக செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வேலன், மாவட்ட மாணவரணி செயலாளர் மற்றும் விவசாய அணி ஒன்றிய செயலாளர் ராஜுவ், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மாதேஷ், மீனவனி ஒன்றிய செயலாளர் சூர்யா, ராமு உள்பட பெத்ததாளாப்பள்ளி அதிமுக கழக நிர்வாகிகள் கிருஷ்ணன், தருமன், பெருமாள், விஜயகுமார், ரகு, பவுன்ராஜ், மணிவண்ணன், தருமன், பாட்ஷா பாய், ஜெயராஜ், வெங்கடசாமி, ரங்கசாமி, ராமசாமி, அன்னையப்பன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
K. Moorthy Krishnagiri Reporter