திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.

 திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

”தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி. தர்மசெல்வனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக ஆ. மணி, தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

”என் பேச்சை கேட்காவிட்டால் மாவட்ட ஆட்சியரை மாற்றுவேன்” என்று தர்மசெல்வன் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
கிருஷ்ணகிரி அருகே உள்ள துவாரகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அபாகஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
படம்