கிருஷ்ணகிரி அருகே உள்ள துவாரகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அபாகஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
கிருஷ்ணகிரி,மார்.27- தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் டி.எஸ்.ஆர்.மஹாலில் குட்வில் அகாடமி நடத்திய அபாகஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்றது.
போட்டியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இரு மாவட்டங்களிலும் இருந்து 45 -க்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றனர்.
மேலும்இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குட்வில் அகாடமி நிர்வாக இயக்குனர் எம்.சதாம் உசேன், குவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் பிரகாஷ்,டாக்டர் சாந்தி, டி.ஜி.ஓ ஜாயின்டைரக்டர் அண்ட் ரூரல் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவிலும் கலந்துக்கொண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
மேலும் இந்த அபாகஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூரில்அமைந்துள்ள துவாரகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவ மாணவியர்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனைப்படைத்தனர்.
சாதனைப் படைத்த மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் கோகுல் மற்றும் பற்றியின் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்களும் பாராட்டினார்கள்.
K. Moorthy Krishnagiri Reporter