1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ் பாடப் பகுதிகள் குறைப்பு- பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ் பாடப் பகுதிகள் குறைப்பு- பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை 2017-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்கள்தான் தற்போது வரையில் நடைமுறையில் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் புத்தகங்களில் பாடப் பகுதிகள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் மாணவ- மாணவிகள் படிப்பதில் சிரமத்தை சந்திப்பதாகவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் கல்வித்துறை வசம் வந்து சேர்ந்தன. இதனையடுத்து அந்த பாடப் பகுதிகளை குறைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியது.

குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப் பகுதிகளை குறைக்கவும், பொருத்தமற்ற பாடப் பகுதிகளை நீக்கி சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் அடிப்படையில் அதற்கான வல்லுனர்கள், பாடநூல் உருவாக்க குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு 1, 2-ம் வகுப்பு பாடநூல்களில் உரிய திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3, 4 மற்றும் 5-ம் வகுப்பு பாடநூல்களில் அதிக பக்கங்கள் கொண்ட பாடப்பகுதிகளை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.அதேபோல், 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 9 இயல்களை 8 ஆகவும், 9, 10-ம் வகுப்பு பாடநூல்களில் 9 இயல்களை 7 ஆகவும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பாடநூல்களில் உள்ள 8 இயல்களை 6 ஆகவும் குறைத்து இருக்கின்றனர்.

அவ்வாறு சீரமைக்கப்பட்ட 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கான பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், 2025-26-ம் கல்வியாண்டு முதல் இந்த பாடப் புத்தகங்கள் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts
நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன?- எடப்பாடி பழனிசாமி
படம்
நீட் நிரந்தரமானது: தேர்வுக்கு தயாராவது புத்திசாலித்தனம்
படம்
ஒசூர் மாநகராட்சியின் நிர்வாக முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
படம்
பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறானது; மிக ஆபத்தானது.!நீதி மன்றங்களின் எல்லையை மீறி வழங்கப்பட்ட தீர்ப்பு.!!
படம்