ஒசூர் மாநகராட்சியின் நிர்வாக முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 ஒசூர் மாநகராட்சியின் நிர்வாக முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் சாலை வசதிகளில்லை, குடிநீர் விநியோகிப்பதில்லை, கழிவுநீர் சுத்தம் செய்யப்படுவதில்லை எனக்கூறி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஓசூர் மின்வாரிய அலுவலகம் முன்பாக ஒசூர் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது..

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர், முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று உறையாற்றினர்

பாலகிருஷ்ணா ரெட்டி பேசுகையில்:ஒசூர் நகராட்சியாக இருந்தபோது அதிமுக ஆட்சியில் மாதந்தோறும் 30 லட்சம் ரூபாயில் நகராட்சி முழுவதும் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டன. ஆனால் மாநகராட்சியாகவும் இதே பரப்பளவு உள்ளபோதும் மாதந்தோறும் 1.50 கோடி ரூபாய் செலவிட்டு குப்பைகளை முழுமையாக அகற்றானல் ஊழல் செய்கிறார்கள்

மாநகராட்சி அலுவலகம் செல்லும் பாகலூர் சாலை குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மேயர், எம்எல்ஏ, பொருப்பு அமைச்சர் உள்ளிட்டோர் இதே சாலையில் சென்றாலும் 4 ஆண்டுகளாக சாலையை சீரமைக்காமல் உள்ளனர். இதுதான் ஓசூர் மாநகராட்சியின் நிலைமை என்றார். ஒசூர் மாநகரின் சாலைகள் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுவதற்கு ஒசூர் வெளிவட்ட சாலை அமைக்க அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கியது  இன்று வரை தொடங்கப்படவில்லை.

பின்னர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் பேசுகையில்:

ஒசூர் மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் ராமநாயக்கன் ஏரி அழகுப்படுத்த நிதி ஒதுக்கியும் இதுவரை பணிகள் நிறைவடையவில்லை, எதற்கெடுத்தாலும் ஊழல், மாநகராட்சியில் பணிகள் காலதாமதப்படுத்தி பின்னர் ஊழல் செய்வதால் ஒசூர் ஊழல் நிறைந்ட மாநகராட்சியாக மாற்றி உள்ளனர்.. ஒசூர் பகுதி மக்கள் கோரிக்கை ஏற்று ஒசூர் பகுதியில் சுற்றுலா தளமாக்க இபிஎஸ் பல திட்டங்கள் கொண்டு வந்ததை திமுக தொடரவில்லை

திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட உழவர் சந்தை, ஓசூர் உழவர் சந்தையில் காதில் ரத்தம் வரும் அளவிற்கு விலைவாசி அதிகம்.. ஒசூர் காய்கறிகளுக்கு பிற பகுதிகளில் விலை குறைவு, உழவர் சந்தையில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை நேரடியாக விற்க வேண்டுமென்பதை தற்போது ஒசூர் உழவர் சந்தை வியாபாரிகள் கையில் சிக்கி சின்னாபிண்ணமாகி உள்ளது..

தமிழகத்தின் பிற பகுதி மக்கள் ஆர்ஓ குடிநீர் மையங்களில் நீர் கொண்டு செல்ல காரணமான ஊர் ஒசூர், அதற்கு முன்னாள் அமைச்சர்  பாலகிருஷ்ணன் ரெட்டி தான் முதற்காரணமாக இருந்தார்.. கர்நாடகா மாநிலத்தில் ஆர்ஓ குடிநீர் மையம் அமைக்கப்பட்டிருந்ததை பார்த்து, அம்மா மூலம் நடைமுறைப்படுத்தி ஒசூரில் ஆர்ஓ கொண்டுவந்தவர் பாலகிருஷ்ணாரெட்டி, ஒசூர் பகுதியில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை ஸ்டாலின், மேயர் மூடியது மட்டுமல்லாமல் திட்டங்களை பராமரிக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒசூர் பகுதியில் ரோஜா மலர் அதிகம் சாகுபடி செய்வதால் உள்ளூர் மலர்களை வெளிநாடில் விற்க சர்வதேச மலர் சந்தை 22 கோடி ரூபாயில் பேரண்டப்பள்ளியில் திறக்கப்பட்டது.. தற்போது ஏல மையம் காட்சி பொருளாக உள்ளது.. திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்றார்..

அதிமுக ஆட்சிக்காலத்தில், ஓசூர் மாநகருக்கு மாநகராட்சி அலுவலகம்  வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு கலைக் கல்லூரி, விளையாட்டு வீரர்களுக்காக அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் புதிய உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை கட்டி கொடுத்தோம், அதேபோல ஓசூர் ராமநாயக்கன் ஏரி கரையில் மிகப்பெரிய சாலையை உருவாக்கியது அதிமுக ஆட்சிதான் தற்போது மக்கள் அதனை மனதார பாராட்டி பயணித்து வருகிறார்கள், அதேபோல தேசிய நெடுஞ்சாலையில் நான்கு இடங்களில் படிக்கட்டுகளுடன் உயர் மேம்பாலம் அமைத்து ஒரு புறத்திலிருந்து மக்கள் மறுபுறத்துக்கு செல்ல ஏதுவான நிலையை உருவாக்கிக் கொடுத்தோம், அதேபோல மூதறிஞர் ராஜாஜியின் சொந்த ஊரான தொரப்பள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றுக்கு நடுவே மேம்பாலத்தை கட்டி கொடுத்தது அதிமுக ஆட்சி தான் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றியது அம்மா அரசுதான் என பெருமையோடு கூறிக் கொள்கிறோம்,

தென்பெண்ணை ஆறு தமிழகத்திற்குள் நுழையும் முதல் இடமான கொடியாளம் தடுப்பணையிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்று ஏரிகளை நிரப்பும் மிகப்பெரிய திட்டத்தையும் கொண்டு வந்தது அதிமுக அரசுதான் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரி குளங்கள் நிரம்பி விவசாயம் செழிக்கும் குடிநீர் பஞ்சம் வராது இந்த திட்டத்தை அதிமுக தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுத்தியது இதன் மூலம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என நினைத்திருந்த நிலையில் இந்த திட்டத்திற்கும் சாவு மணி அடித்தது திமுக அரசாங்கம்,

ஜீரோ பைமாசி எனப்படும் நிலங்கள் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் புதுக்கோட்டை மாவட்டத்திலும் தான் அதிக அளவில் உள்ளது. இந்த பைமாசி நிலங்களை கணக்கெடுக்கும் வகையில் உடனடியாக அந்த பகுதியில் சாட்டிலைட் வரைபடங்களை கொண்டு அளவு எடுக்கும் பணிகளை அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பலன் கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில் அந்தத் திட்டத்தையும் முடக்கியது திமுக அரசு 

ஓசூருக்கும் ஓசூர் மாநகருக்கும் எந்தவித வளர்ச்சியையும் வளர்ச்சி திட்டத்தையும் செய்யாத ஓசூர் எம்எல்ஏ சுமார் 1500 கோடி ரூபாய்க்கு திட்டத்தை செய்து கொடுத்தோம் என ஆறு தட்டிக் கொள்கிறார் இது எப்படி இருக்கு என்றால் வடிவேல் படத்தில் சிலம்பு விளையாட்டில் வெற்றி பெறாத அவர் பாத்திரக் கடைக்கு சென்று விளையாட்டு கோப்பையில் தனது பெயரை போட்டு கொண்டு மேளதாளம் முழங்க நான் தான் வெற்றி பெற்றேன் என கோப்பையோடு வீட்டுக்கு செல்வார், 

அதேபோல் தான் ஓசூர் பகுதியில் செய்யாத வேலைகளை நாங்கள் தான் செய்தோம் என்று கூறி அதிமுக காலத்தில் செய்யப்பட்ட திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார்கள் என்றார்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு அந்த கூட்டணி இருக்கும் என அவர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பெண்கள் குறித்து தவறாக பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி அமைச்சர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி பொன்முடி படத்திற்கு காலனி மாலை அணிவித்த அதிமுக மகளிரணியினர் பொன்முடி படத்தை காலனியால் அடித்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது,

நிகழ்ச்சியில் ஓசூர் கிழக்கு பகுதி செயலாளர் ராஜு, ஓசூர் வடக்கு பகுதி செயலாளர் வாசுதேவன், ஓசூர் தெற்கு பகுதி செயலாளர் அசோகா, ஓசூர் மேற்கு பகுதி செயலாளர் மஞ்சு, மாநில எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் பொய்யாமலி, மாவட்ட கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பொருளாளர் மல்லையன் ,  ஓசூர் ஒன்றிய கழக செயலாளர் ஹரிஷ் ரெட்டி, ரவிக்குமார், பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், பாசறை மாவட்ட செயலாளர் ராமு, எம்ஜிஆர் மாவட்ட இணை செயலாளர் ஜெய் பிரகாஷ், முன்னாள் நகர செயலாளர் நாராயணன், தொழில் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன்,மாவட்ட துணை செயலாளர் மதன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன், மாமன்ற கல்வி குழு தலைவர் ஸ்ரீதரன்,பாசறை மாவட்ட இணை செயலாளர் லோகேஷ்,ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் லக்ஷ்மி ஹேமா குமார், சிவராமன், குபேரன் சங்கர், ரஜினிகாந்த்,எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், ஓசூர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் நாராயண ரெட்டி, சுரேஷ் பாபு, நந்தகுமார்,பேரவை மாவட்ட இணை செயலாளர் செல்வம், முன்னாள் ஓசூர் நகர மன்ற தலைவர்கள் கந்தப்பன், நஞ்சுண்ட சாமி, பகுதியாவை தலைவர் நடராஜன், ரமேஷ்,  ஓசூர் வட்ட கழக செயலாளர் கோபால ராமச்சந்திரன், ஹரி, சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி லக்ஷ்மன், கழக நிர்வாகி ஆதி, அம்மா பேரவை நகர ஒன்றிய நிர்வாகிகள் சாமிநாதன் சந்துரு சந்தோஷ் மாதையன், மகேஷ், 14வது வார்டு  மனோ, மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர் கழகத் தோழர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

E. V. Palaniyappan. Reporter