கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரில் பாஜக சார்பில் திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி,ஏப்.25- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திமுக அமைச்சர் பொன்முடி சமீபத்தில் இந்து மதத்தின் ஆணி வேரான சைவ வைணவ சமயங்களை வைத்து பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில்
கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் விமலா வரவேற்பு உரையாற்றினார். முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் சிவபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.மத்தூர் மண்டல தலைவர் ராஜேஸ்வரி, ஒன்றிய துணை தலைவர் மெடிக்கல் பெருமாள், முன்னாள் மாவட்ட துணை தலைவர் கே.வெங்கடாஜலபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதேஷ், முன்னாள் ஒன்றிய தலைவர் தாபா சிவா, பர்கூர் மண்டல தலைவர் மயில்வேலன், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் சஞ்சீவராஜ், பாஜக பொறுப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், கார்த்திகேயன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
K. Moorthy Krishnagiri Reporter