பர்கூர் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி சார்பில் தொடர் நீர் மோர் தர்பூசணி பழம் வழங்கும் விழா

 பர்கூர் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி சார்பில் தொடர் நீர் மோர் தர்பூசணி பழம் வழங்கும் விழா 

கிருஷ்ணகிரி,ஏப்.25- தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் வழிகாட்டுதலின்படி, பர்கூர் பேரூராட்சியில் திமுக கழகம் சார்பில்  பர்கூர் பேருந்து நிலையத்தில் தொடர்ந்து நீர், மோர், தர்பூசணி பழம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக தலைமை கழக செயற்குழு உறுப்பினர் ஜெ.கே. கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், நகர செயலாளர் வெங்கட்டப்பன், மாவட்ட பிரதிநிதி கே எஸ் ஜி கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி வெங்கடசாமி, கவுன்சிலர்கள் துரைசாமி, ஜான் ஜேசுதாஸ், வடிவேல், நகர இளைஞரணி பழனி, வர்த்தக அணி ராமன் மாவட்ட சிறுபான்மை அணி சாஜித், எஸ்.கே.காந்தி, பி.கே.ரமேஷ்,முன்னாள் கவுன்சிலர் சக்கரவர்த்தி, அச்சமங்கலம் கிளை செயலாளர் மார்ட்டின்,கிளை பிரதிநிதி ஆர். ரமேஷ்  உள்ளிட்ட பலர்கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் தர்பூசணி பழம் உள்ளிட்ட பல வகைகளை வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை காந்தி செய்தார்.

K. Moorthi. Krishnagiri Reporter