RTE மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு...?!
RTE மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு 24.04.2025 அன்று அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதன்படி 25.04.2025 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இணையத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2025 இரவு 11.59Pm. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் இறுதிப்பட்டியல் 02.06.2025 வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவர் சேர்க்கை துவங்கிவிட்ட நிலையில் தமிழக அரசு தற்போது தான் அதற்கான முன் முயற்சி எடுத்துள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் RTE மாணவர் சேர்க்கை நடக்குமா? நடக்காதா? என்று பலரும் கேட்டு வந்த நிலையில் தற்போது அறிவிக்க இருப்பது வரவேற்கத் தகுந்தது தான்.
இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட RTE நிலுவை தொகை இன்னும் வழங்கப்படாதிருப்பது பள்ளி நிர்வாகிகள் இடையே வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் தற்போது வெளியிடப் போகும் இந்த அறிவிப்பு RTE திட்டத்தை நீர்த்துப்போக செய்யாமல் இருந்தால் சரி என்று ஆறுதல் படுத்திக் கொள்ள வேண்டி உள்ளது.